Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் மேம்படுத்துவதற்கு மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று பிரிட்டனில் அரசியல்வாதிகளுக்கு டொக்டர்மார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக மரங்களை நடுவதால் மக்களுக்கு ஆரோக்கியமான இயற்கை சூழல் உருவாகும் என்றும் சுகாதாரத் துறைக்கான நிதிச் சுமை குறைவதற்கு உதவும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் மரங்களை நடுவதால் இத்தகைய பல நன்மைகள் கிடைப்பதாகவும், சூழல் மாசடைவதை தடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
உட்லண்ட் என்னும் அமைப்பின் தலைமை அதிகாரியான டொக்டர் டெரன் மூர்க்ரொப்ட் இது பற்றி தெரிவிக்கையில், 'அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறைகொள்ள வேண்டும் என்றும் காலநிலை மாற்றத்தின் அதிக விளைவுகளுக்கான தூய்மையான பசுமையான உலகத்தின் சாத்தியமான உயிரைக் காக்கும் நன்மைகளை இந்த இயற்கை சூழல் பராமரிப்பு அங்கீகரிக்கிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மரங்களும், தாவரங்களும் நம்மை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வைக்கின்றன. அவை காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்து போராடுகின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகின்றனர் மாசுபாட்டைக் குறைக்கின்றன.
'இயற்கை மற்றும் நமது கிரகத்தை பாதுகாக்கின்றன. அதனால்தான் நாங்கள் எங்களது அதிக மரம் நாட்டும் காலநிலை பிரசாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களை கோருகிறோம்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
19 minute ago
27 minute ago