Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும், இதனை தினமும் செய்து வரலாம்.
வெந்தயத்தை 2 ஸ்பூன் எடுத்து ஒரு கப் நீரில் போட்டு, கொதிக்க வையுங்கள். நீர் குளிர்ந்ததும், சிறிது முகத்தில் தடவி சில நிமிடங்களுக்கு பிறகு அதே நீரில் கழுவுங்கள். முகப்பருக்களை விரைவில் குணப்படுத்தும்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளீர்ந்த நீரில், கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ்பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.
வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்தி பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள், இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.
வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.
22 minute ago
33 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
51 minute ago
56 minute ago