2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முளைவிட்டிருக்கும் வெந்தயத்தின் பயன்கள்

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும்.  இவற்றை அப்படியே கூட எடுத்துச்சாப்பிடலாம். இதனால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.

முதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும்.  வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து, அதனை ஸ்கல்ப்பில் தடவி மசாஜ் செய்தால், பொடுகுத்  தொல்லை மற்றும் வறட்சியைத் தவிர்க்கலாம். மேலும் இந்த முறையானது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின் சி, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.

வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில், 10 நாட்கள் வரை வெந்நீருடன்  உட்கொள்ள வெள்ளைபடுதல் குணமாகும்.

அத்தோடு இதனை டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர இரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.

முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம். இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X