2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

முள்ளந்தண்டு வலி இலவச சிகிச்சை முகாம்

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

முள்ளந்தண்டு வலி உள்ளவர்களுக்கான 'டோர்ன் முறை' தெரபி (FREE GERMAN DORN TREATMENT) இலவச சிகிச்சை முகாமுக்கு வருமாறு, இலங்கைக்கான டோர்ன் வைத்தியமுறைச் செயற்பாட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜைலானி ரஷ்வி, அழைப்பு விடுத்துள்ளார்.

இம்மாதம் 30ஆம் திகதியும் டிசெம்பெர் 2 மற்றும் 3ஆம் திகதிகளில், கொழும்பில் 3 இடங்களில் இந்த இலவச சிகிச்சை முகாம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (30) கொழும்பு 13, புதிய செட்டியார் தெரு, இலக்கம் 102இலுள்ள பட்டக்கண்ணு நிலையத்தில், காலை 11 மணி முதல் மாலை 4.30 மணிவரை இம்முகாம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2ஆவது சிகிச்சை முகாம், டிசெம்பெர் 2ஆம் திகதி காலை 11 மணி முதல் மாலை 4.30 மணிவரை, கொழும்பு 13, புதிய செட்டியார் தெரு ஸ்ரீராம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

3ஆவது சிகிச்சை முகாம், டிசெம்பெர் 3ஆம் திகதி பம்பலப்பிட்டி ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் காலை 11 மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை இடம்பெறவுள்ளது.

முற்பதிவுகளுக்கு, 011-2423168, 011- 2431759, 011-2323818 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X