2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தெல்தெனிய விபத்தில் 29 பேர் காயம்

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  வேகல ஹுலங்வங்குவ எனும் இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன  விபத்தில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகல 'ஹூலங்வங்குவ'(காற்று முடக்கு) என்ற முடக்கில் இரு பஸ்வண்டிள் நேருக்கு நேர் மோதியதில் பயணித்த பயணிகளுடன் இரு ப்ஸ்வண்டிகளினதும் சாரதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இரு பஸ் வண்டிகளினதும் சாரதிகளின் நிலமை கவலைக்குரியது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் தெல்தெனிய, மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .