2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பொகவந்தலாவையில் 4 கடைகளில் கொள்ளை; கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 08 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி,எஸ்.சுவர்ணஸ்ரீ


ஹட்டன், பொகவந்தலாவை நகரிலுள்ள நான்கு கடைகளில் இடம்பெற்றுள்ள கொள்ளைச் சம்பவங்களைக் கண்டித்து கடை உரிமையாளர்கள் அந்நகரின் மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

மூடிய கடைகளில் நான்கு கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில் கொள்ளையிட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்யுமாறு வலியுறுத்தியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகைக்கடை, இரு பலசரக்குக்கடைகள் உட்பட நான்கு கடைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் கொள்ளையிடப்பட்டுள்ளன. நகைக்கடையிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தங்கநகைகள்  கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கடை உரிமையாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X