2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெஹெரகல நீர்தேக்கத்தின் ஆறு 6 வான் கதவுகள் திறப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எப்.எம்.தாஹிர்)

மொனராகலை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பெய்த கடும் மழைக் காரணமாக யால வன சாரணாலயப் பகுதியில் அமைந்துள்ள வெஹெரகல நீர்தேக்கத்தின் ஆறு 6 வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

வெஹெரகல நீர்தேக்கத்தின் ஆறு கதவுகள் நான்கு அடி உயரத்திற்கு திறந்துவிடப்பட்டதாக பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் அமரஜித்லியனகே தெரிவித்தார்.

இதன்காரணமாக மாணிக்க கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதினால் செல்லக்கதிர்காம மாணிக்க கங்கைப்பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயம் நீரினால் மூடப்பட்டதுடன் இப்பிரதேசத்தின் பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பிரதேச செயலாளர் டி.எம்.அதபத்து தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X