Sudharshini / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர். கோகுலன்
வெலிமடை பதுளை வீதி, ஹாலிஎல நகரகத்துக்கு அண்மையில் இன்று (02) முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் முச்சக்கரவண்டி சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து இடம்பெறும் போது குறித்த முச்சக்கர வண்டியில் 5பேர் பயணித்துள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago