2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

“அரசியல் சாக்கடை என நினைத்து ஒதுங்கக்கூடாது”

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'அரசியல் என்பது சாக்கடை என நினைத்து மக்கள், அதிலிருந்து ஒதுங்குவதை நிறுத்த வேண்டும். அரசியல் என்பது மக்களின் உரிமையாகும். சாக்கடை அரசியலை, தூய்மைப்படுத்திய அரசியலாக மாற்றியமைக்க வேண்டியப் பொறுப்பு, மக்களைச் சார்ந்ததாகும்” என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியல் கலாசாரத்தில், கௌரவமான மாற்றத்தை நோக்கிய நீண்டதோர் பயணத்துக்கான மார்ச் 12 வேலைத்திட்ட நிகழ்வு,  ஊவா மாகாண சபைக்கு முன்பாக, நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

'அரசியல்வாதிகள், தேர்தல் காலங்களில் மட்டும் தரம், தராதரம், ஏழை, பணக்காரர்கள் என்று பாராமல், வாக்குகளை சேகரித்து வெற்றிப் பெறுகின்றனர். பாடசாலைகளைகூட அவர்கள் விட்டுவைப்பதில்லை. ஆனால், அவர்கள் வெற்றிபெற்றதும் வாக்காளர்களை ஒரு  பொருட்டாக மதிப்பதுமில்லை.

வாக்காளர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, பிரதிநிதியொருவரை சந்திக்க வேண்மெனில், அதற்குக் கூட தரகர்கள் தேவைப்படுகின்றனர்.  இந்நிலைமை மாற்றியமைக்கப்படல் வேண்டும். தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக, பிரதிநிதிகளை உரிமையுடன் நேரடியாக சந்திக்கும் நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

மக்களது தேவைகளை,  அரசியல்வாதிகள் பூர்த்தி செய்யாதுவிட்டால்  அவர்களுக்கு எதிராக  போராட்டத்தில் இறங்கவும், வாக்காளர்கள் தயாராக வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X