2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

"அரசியல் செய்வதற்கான இடம் பாடசாலை அல்ல"

Kogilavani   / 2017 மார்ச் 10 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

பாடசாலை சுயாதீனமாக இயங்க வேண்டுமே ஒழிய அரசியல் செய்யும் இடமாக இருக்கக் கூடாதென, மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

ஹட்டன் கல்வி வலயம் சென் ஜோன் பொஸ்கோ கல்லூரியின் புதிய கட்டடத்திற்கான பெயர் பலகையினை திறந்து வைக்கும் நிகழ்வில்  கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

''கடந்த முறை இந்த பாடசாலைக்கு வருகைதந்த போது பாடசாலை அபிவிருத்திக்காக ஒரு கோடி ரூபா நிதியை  ஒதுக்கினேன்.  ஆனால் இந்த நிதியை, செயற்படுத்தவிடாது மத்திய மாகாண அமைச்சினூடாகவே அபிவிருத்தியை செய்ய வேண்டும்'' எனக் கூறி பாடசாலை அபிவிருத்தி செயற்பாட்டினை மேற்கொள்ள இடமளிக்கவில்லை.

ஆதலால், காலம் கடந்த நிலையில் தற்போது  70 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில்  டிரஸ்ட் நிருவனதினூடாக, 1500 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

நான் பாடசாலைகளில் அரசியல் செய்பவன் அல்ல. மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோரை மதிப்பவன் குருவை, கடவுளாகவே நேசிக்கிறேன். எமது சமுதாயம் கல்விச் சமூகமாக வளர்வது ஆசிரியர்களின் கைகளிலே தங்கியுள்ளது.

வசதியான பிள்ளைகள் படிக்கும் பாடசாலையில், சிறந்த பெறுபேறுகளை எடுப்பது பெரிய விடயமல்ல. வறிய மாணவர்களை கல்வியில் வளர்ச்சியடைய செய்வது தான் சிறந்த விடயமாகும் என அமைச்சர் பழனி திகாம்பரம் இதன்போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .