Niroshini / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 30 பாடசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸணன் தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் குறித்த 30 பாடசாலைகளின் அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதன் போது குறித்த 30 பாடசாலைகளிலும் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் மிக முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக செய்ய வேண்டிய வேலைகள் தொடர்பாகவும் மிகவும் விரிவாக ஆராயப்பட்டன.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸணன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினோம். இதன் பொழுது அவர் இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தி அறிக்கை ஒன்றை தனக்கு பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தமைக்கு அமையஃவெ இந்த கலந்துரையாடல் எனது அமைச்சில் நடைபெற்றது.
அதன்படி மத்திய மாகாணம், ஊவா மாகாணம்,சப்ரகமுவ மாகாணம்,மேல் மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களை சேர்ந்த 28 பாடசாலைகள் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளோம். இது தொடர்பான மேலதிக விடயங்களை இந்திய தூதரகத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை உடனடியாக ஒரிரு தினங்களில் இந்திய தூதரகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. அதன் பின்பு சுமார் ஆறு மாத காலத்துக்குள் இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன். அண்மையில் வடகிழக்கில் 26 பாடசாலைகளை இந்திய அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் முதல் முறையாக இந்தளவு பாரிய நிதியினை அதாவது 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான தொகையினை எமது பாடசாலை அபிவிருத்திக்காக வழங்க முன்வந்துள்ளமையானது மிகவும் வரவேற்கக்கூடிய ஒரு விடயமாகும். குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரு வெற்றிiயாகவே நான் இதனை பார்க்கின்றேன். அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகளை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டு இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. எதிர்காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago