2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

10 இலட்சம் ரூபாய் செலவில் கரப்பந்தாட்ட மைதானம் திறப்பு

Kogilavani   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் பத்து இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கரப்பந்தாட்ட மைதானத்தை, மத்திய மாகாண விவாசாய மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ராமேஷ்வரன் சனிக்கிழமை(13) திறந்து வைத்தார்.
 
நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஆறுமுகன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இந்த மைதானம் அமைக்கப்பட்டு, ஹெமிஸ்டார் விiயாட்டுக்கழக உறுப்பினர்களிடம்
உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மைதான திறப்பு விழாவை தொடர்ந்து,  ஹெமிஸ்டார் விiயாட்டுக்கழகத்தின் முன்னால் உறுப்பினர் அமரர் பி.மகேஸ்வரன் ஞாபகார்த்தமாக இரவு-பகல் கரப்பந்தாட்டப் போட்டியொன்றும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தோட்ட உயரதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .