Kogilavani / 2016 ஜூலை 05 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் 1990ஆம் ஆண்டு, க.பொ.த சாதாரணதரத்தில் கல்விக்கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், மாபெரும் ஒன்று கூடல் சனிக்கிழமை(9) காலை 09.00 மணிக்கு, கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வொன்று கூடலின் சிறப்பம்சமாக 1990களில் கற்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர். இதேவேளை, மேற்படி மாணவர்களால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள், செயற்பாடுகள் என்பன குறித்தும் இதன்போது விரவாக ஆராயப்படவுள்ளது.
இவ் ஒன்று கூடலில் இறுதியில் 'சுவிட்ஹாட்ஸ்' இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஆர்;.பிரான்சீஸ், ரி.தயானந்தா, எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .