Kogilavani / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.எம்.ரம்ஸீன்
பெருகிவரும் குற்றச்செயல்களை காணும்போது, குற்றச்செயல்கள் பட்டியலில் உலகில் முதல் இடத்தை எமது நாடு பெற்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண குறிப்பிட்டார்.
கம்பளை நகரில் திங்கட்கிழமை நமைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
'நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மிக வேகமாக அதிகரித்துச் செல்வதைக் காணலாம். இந்நாட்டில் நான்கு சிறந்த மதங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறிருக்க குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதை காணும்போது கவலை ஏற்படுகின்றது. மனிதன் மதங்களுடன் தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளும் போது குற்றச் செயல்களில் இருந்து தன்னை தவிர்த்துக் கொள்ள முடியும்' என்றார்.
இதேவேளை, 'நாட்டில் அரசியல் உரிமை சகலருக்கும் உண்டு. காற்று, கடல், ஆற்று நீர் முதலானவற்றை சுதந்திரமாகத் தடையின்றி பெற்றுக்கொள்வது போல் அரசியலிலும் சகலருக்கும் சுதந்திரமாகத் தடையின்றி ஈடுபட முடியும். எனவே கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று உரிமைகள் பற்றி சிந்திக்கும் பக்குவத்தை வளர்த்துக்ள கொள்வதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்' என்றும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .