Kogilavani / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் செல்லும் பாதை திறக்கப்படுவதற்கு அஸ்கிரிய பீடமும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனை தாம் பூரணமாக எதிர்ப்பதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர், கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் தெரிவித்தார்;.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், 'இப்பாதை திறக்கப்படுவதற்கு, அஸ்கிரிய பீடத்தின் நிர்;வாக சபையும் பௌத்த மதகுருமார் சங்கமும் (சங்க சபா) தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
மேற்படி பாதையை திறக்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். இவர்கள் பலவாறு கூறி எமக்கிடையே பேதங்களை உருவாக்க பார்க்கின்றனர்.
எமது அஸ்கிரிய பீட நிர்வாக சபையும் இதற்கு எதிர்;ப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீ தலதா பெருமானுக்கு வழங்கும் மரியாதையாகவே இப்பாதையை திறந்துவிடக் கூடாது என்கிறோம்' என அவர் மேலும் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago