Kogilavani / 2016 ஜூலை 01 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி, காவத்தை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் இடங்களை வைத்திருந்த 14 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவத்தை சுகாதார வைத்திய அதிகாரி சுகத் அருணசிறி தெரிவித்தார்.
காவத்தை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக மேற்படி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேற்படி பிரதேசத்துக்;குட்பட்ட தெமுவாத்த, ஹொரமுல்ல ஆகிய பகுதிகளில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 14 இடங்கள் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் காணப்பட்டன.
மேற்படி இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக இறக்குவானை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .