Kogilavani / 2016 ஜூலை 28 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
அம்பகமுவை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஸ்கெலியா நகரில், சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பில் நகரசபை கவனம் செலுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள், நகரசபை அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.
மஸ்கெலியா நகரத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு கட்டப்படும் கட்டடங்களுக்கு அம்பகமுவ பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
நகரங்களில் கட்டப்படும் வர்த்தக நிலையங்களுக்கு இடையில், இடைவெளிவிடப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளப்போதிலும், மஸ்கெலியா நகரில் அவ் அறிவுறுத்தல் பின்னப்பற்றப்படாமல் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தீ விபத்தின்போது முழு நகரமே தீக்கிரையாகுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இது தொடர்பில் நகரசபை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
4 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago