2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: 63 வயது முதியவர் கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை, கிராந்துருகோட்டை பகுதியில் 5 வயது சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 63 வயது முதயவரொருவரை பொலிஸார் இன்று (17)  காலை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சிறுமியின் பாட்டன் உறவுமுறையுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருபவரெனவும் சிறுமியின் தாய் தனியார் வகுப்பொன்றுக்காக வெளியில் சென்றிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் ஸ்டிக்கர் ஒன்றை காட்டுவதாகக் கூறி சிறுமியை தனது அறைக்குள் அழைத்துச் சென்று இவ்வாறு வன்புணர்வு புரிந்துள்ளதாக தெரியவருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி, வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .