2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

’1,000 ரூபாயில் பெரிய முடிச்சு’

Editorial   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மகேஸ்வரி விஜயனந்தன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளத்தை, 1,000 ரூபாயாக அதிகரித்துக் கொடுப்பதற்கு, சம்பள நிர்ணய சபை இணங்கிவிட்டது. வர்த்தமானியும் வெளியாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாலும், அரசாங்கத் தரப்பில் நேற்று (16) புதுக் கதையொன்று கூறப்பட்டது. 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்றது. அதில், பங்கேற்றிருந்த ஊடகவியலாளர், 1,000 ரூபாய் தொடர்பில் கேள்வியெழுப்பினார். அதற்கு, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில பதிலளித்தார்.

'பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் தொழிற்சங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தில் இரு தரப்பும் இணைந்து இருக்கும் வரை, இரு தரப்பினரது இணக்கமின்றி, சம்பளத் திருத்தத்தை முன்னெடுக்க முடியாது' என்றார்.

கூட்டொப்பந்த காலம் இம்மாத இறுதியில் நிறைவுக்கு வருகிறது. சம்பள விவகாரத்தில், இருதரப்புக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படாமை காரணமாக, வழமைபோல புதிய கூட்டொப்பந்தம் ஒன்றைச் செய்வதற்குப் பதிலாக, சம்பள நிர்ணய சபை ஊடாக, அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக, தொழில் அமைச்சரின் ஊடாக அதிகரிக்க, அமைச்சரவை தீர்மானித்தது எனத் தெரிவித்த அவர், இந்தத் தீர்மானமானது குறித்த கூட்டொப்பந்தக் காலம் நிறைவடைந்த பின்னரே செயற்படுத்தப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X