2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

1000 ரூபா போலித்தாளுடன் ஹட்டனிலும் ஒருவர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



-க.கிஷாந்தன்

1000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள் ஒன்றை வைத்திருந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

ஹட்டன் நகருக்கு பொருட்கள் வாங்க வருகின்ற மக்களிடம் குறித்த சந்தேகநபர் 1000 ரூபா பெறுமதியான போலி தாளை வைத்து மாற்றுவதற்கு முயற்சித்த  போதே பொலிஸார் அவரை கைது செய்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் பனாகொடை இராணுவ முகாமில் இருப்பவர் என்றும்  தீபாவளியை முன்னிட்டு இவர் ஹட்டன் நகரில் வியாபாரம் செய்வதற்கு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .