Editorial / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
பெருந்தோட்டப் பகுதியில், ஆரம்பக் கல்வி மேம்பாட்டுக்காக 10க்கும் மேற்பட்ட முன்பள்ளிகளை அமைத்துக் கொடுத்து, அவற்றை பிரிடோ நிறுவனம் மேற்பார்வை செய்யும் வகையில் கையளித்துள்ளதாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை, ஹோல்புரூக் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் பங்குபற்றி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு கட்டடத்தின் அத்திவாரம் ஒழுங்காகவும் உறுதியாகவும் இருந்தால்தான், பல மாடிகளைக் கொண்ட உயர்ந்தக் கட்டடத்தை நிர்மாணிக்க முடியும் என்பதுபோலவே, ஆரம்பக் கல்வி என்ற அத்திவாரம் சரியாக அமைந்தால்தான், உயர்கல்வியில் சிறந்து விளங்க முடியும் என்றும் கூறினார்.
அதை உணர்ந்தே, தான் அமைச்சராக இருந்த போது, மலையகத்தில் 10க்கும் மேற்பட்ட முன்பள்ளிகளை அமைத்துக் கொடுத்ததாக அவர் கூறினார்.
ஒரு காலத்தில், நகர்ப்புறங்களிலுள்ள பிள்ளைளுக்கு மாத்திரம் சொந்தமாகவும் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு எட்டாக் கனியாவும் இருந்து வந்த முன்பள்ளிக் கல்வி, இன்று மலையகமெங்கும் வியாபித்துள்ளது என்றும் அதனால், நகர்ப்புறங்களுக்கு சென்றுதான் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்ற நிலைமை மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .