2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘12இல் உறுதியாக இருக்கிறோம்’

Editorial   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், டீ. சந்ரு, பி.கேதீஸ் 

“நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றும்போது, தேசிய கொள்கைகளைக் கவனத்தில் எடுக்கும் அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் மலைப்பாங்கான புவியியல் நிலைமைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்” என, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகள் பன்னிரண்டு என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்” எனவும் தெரிவித்தார். 

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அதிகரிப்பது தொடர்பில், மத்திய மாகாண சபை செயலாளரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று (14) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

 “விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், பிரதேச சபைகளை அதிகரிக்கும் யோசனை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, நாம் துறைக்கு பொறுப்பான அமைச்சருடன் ஏற்கெனவே பலசுற்று பேச்சுவார்ததைகளை நடாத்தி, சில உடன்பாடுகளை எட்டியுள்ளோம். இதற்கு மலையக கட்சிகள் அனைத்தும் உடன்பட்டுள்ளன. அதன்படி நுவரெலியா மாட்டத்தில் 12 பிரதேச சபைகள் உருவாக்கப்படல் வேண்டும் எனும் கருத்தை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். 

“தமது திட்டம் தொடர்பான விளக்கத்தை அளித்த மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் பொரலஸ்ஸ, உள்ளூராட்சி மன்றங்களை அதிகரப்பதற்கான தேசியக் கொள்கைப் பற்றி விளக்கம் அளித்தார். இதில் பிரேதச சபை ஒன்றை உருவாக்க குறைந்த பட்சம் 50 ஆயிரம் சனத்தொகை பிரதேசத்தில் வாழவேண்டும் எனும் நியமத்தைச் சொன்னார். அதன்படி, நுவரெலியா - அம்பகமுவை பிரதேச சபைகள் தலா 4 சதவீதம் அதிகரிக்கப்படலாம். எனினும், பிற நியமங்களையும் கருத்தில்கொண்டு எமது கோரிக்கை தலா மூன்று என்பதாக எமது முன்மொழிவுகளைச் செய்திருக்கிறோம்.  

“அதேபோல ஹங்குராங்கெத்தை, வலப்பனை, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளும் தலா இவ்விரண்டாகப் பிரிக்கப்படல் வேண்டும்.  

“அதேபோல மஸ்கெலியா மற்றும் ராகலை நகரங்களை அண்டியதாக நகரசபைகள் உருவாக்கப்படல் வேண்டும் என தமக்கு யோசனை கிடைக்கப்பெற்றதாக, மேலதிக செயலாளர் கூறியதையும் நாம் வரவேற்கின்றோம். அது, பிரதேச சபைகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்படுதற்கான பாதிப்பதாக இருக்கக் கூடாது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .