R.Maheshwary / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
அலதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகம பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்
அத்துடன் குறித்த வீட்டிலிருந்த மேலும் இருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (16) இரவு பொலெரோ ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த 15 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அலதெனிய பொலிஸ் அதிகாரியொருவர், சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தின் உயர் அதிகாரியொருவருக்கும் இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கட்டுகஸ்தோட்ட பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவமே இந்த தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார்.
23 minute ago
32 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
38 minute ago
44 minute ago