2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

அக்குறணையில் சட்டவிரோதக் கடைகளை அகற்ற தீர்மானம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரில் சட்டவிரோதமான முறையில் நடத்தப்படுகின்ற அனைத்து பாதையோரக் கடைகளையும் அகற்றுவதற்கு பிரதேசசபை தீர்மானித்துள்ளது.

நோன்புப்பெருநாள் காலம் என்பதனால் அக்குறணை நகரில் பாதையோர வியாபாரம் தற்போது பரவலாக காணப்படுகிறது.

பல வருடங்களாக தாம் நகரில் வியாபாரம் செய்ததாகவும் திடீரென தம்மை அகற்றுதவற்கு எடுத்த முடிவு தம்மை பெரும் கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் நகரின் பாதையோர வியாபாரிகள் கூறுகின்றனர்.

அக்குறணை பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.எம். சிம்சான் இது சம்பந்தமாக தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், சட்டவிரோத பாதையோர வியாபாரிகளை அகற்றும் பணி பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம் ஒன்றின் படி நாடு முழுவதும் நடத்தப்படுவதனால் அக்குறணைக்கு மட்டும் அதனை மாற்ற முடியாது என கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X