2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சாமிமலை ட்ரஸ்பி தோட்டத்தில் வைத்திய சேவை குறைபாடு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

சாமிமலை ட்ரஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மக்களுக்கான வைத்தியசேவைகள் உரிய வகையில் கிடைப்பதில்லையென தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.  

ட்ரஸ்பி தோட்டத்திலுள்ள மருந்தகத்தின் மூலமாக மாதத்தில் 15 நாட்களுக்கு மாத்திரமே தோட்ட மருத்துவ உத்தியோகஸ்தரின் சேவை கிடைப்பதாகவும் முக்கிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் தோட்ட மக்கள் மேலும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் அட்டன் பிராந்திய நிறுவனத்துடன் தான் தொடர்பு கொள்ளவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X