Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
இவ்வருட ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மலையக ஆசிரியர் ஒன்றியம் தமது அங்கத்தவர்களுக்கிடையில் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலிய எழுத்தாக்கப் போட்டிகளை நடத்தவுள்ளது.
ஆசிரியர்கள் தாம் எழுத விழையும் ஆக்கங்கள் பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டதாக அமைதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கத்தின் தொனிப்பொருள் சமூக பிரஞ்சை உடையதாக அமைதல் வேண்டும். கட்டுரைகள் ஆய்வு பூர்வமானதாக இருத்தல் வேண்டும். சான்றாதாரங்கள் காட்டப்பட வேண்டும். அத்துடன் உள்ளடக்கம், உருவம், அமைப்பு குறிப்பாக கவனத்தில் எடுக்கப்படும். ஒருவர் ஒரு ஆக்கம் மட்டுமே எழுதலாம். ஆக்கங்கள் கணினி பதிப்பு, தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளில் பங்குபற்றுகின்றவர்கள் மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். அத்துடன் தாய் சங்க செயற்குழு உறுப்பினர்கள் இப்போட்டியில் பங்குபற்ற முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுகின்றவர்களுக்கு முதலாம் பரிசாக 2500 ரூபாவும் இரண்டாம் பரிசாக 1500 ரூபாவும் மூன்றாம் பரிசாக 1000 ரூபாவும் பங்குபற்றியமைக்காக சான்றிதழ்களும் வழங்கப்படும். அத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஆக்கங்கள் தொகுப்பாக வெளியிடப்படும். சகல ஆக்கங்களும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு முன் 133 1/1 திம்புள்ள வீதி ஹட்டன் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மலையக ஆசிரியர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago