Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
நுவரெலியா மாவட்டம் உட்பட மலையகத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழையினால் ஓடைகளிலும் ஆறுகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. காசல்ரி, மவுசாகலை, கெனியன், லக்ஸபான போன்ற நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்ற இந்த நிலையில் லக்ஸபான ,கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொட்டகலை பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் ஹரிங்டன் பகுதியிலுள்ள 25 வீடுகள் நேற்று முன்தினம் மாலை வெள்ள நீரின் பாதிப்புக்கு உள்ளாகியதால் இந்த வீடுகளைச்சேர்ந்த குடியிருப்பாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். இந்த நிலையில் ஹட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் பல்வேறு பகுதிகளில் சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழையினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே தமது தொழிலை மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைகளிலும் மாணவர் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர். அடை மழை காரணமாக மலையக நகரங்களுக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் தமது வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதேவேளை தொடர்ச்சியான மழை வீழ்ச்சியினால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாய பயிர்ச்செய்கையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago