2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பொக்காவலை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் மின்சாரம் தாக்கியதன் காரணமாக 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.

பூஜாபிட்டிய அங்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற விநோத நிகழ்வொன்றை பார்த்து விட்டு 10 பேர்கள் கொண்ட நண்பர்கள் குழுவொன்று இவ்வீதியின் ஊடாக இரவு 11 மணியளவில் நடந்து வந்தபோது  அருகே வேலியில் கட்டப்பட்டிருந்த மின்கம்பிகளில் பட்டதாலேயை இம்மரணம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் கண்டி ஸ்ரீ சுமங்கல மகா வித்தியாலயத்தில் 12ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய சாமிக நிரோஷன என்ற மாணவனாவார்.

இச்சம்பவம் சம்பந்தமாக கலகெதர பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர்.




 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X