2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பொலிஸாரால் தேடப்படும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.குவால்தீன்)

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு இடையூறு விளைவித்த விவகாரம் தொடர்பாக மேலும் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் தேடப்படுவதாக கண்டி பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா, பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த போது அவருக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே நான்கு மாணவர்கள கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேலும் நான்கு மாணவர்கள் குறித்த பொலிஸார் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்ததை அடுத்தே குறிப்பிட்ட நான்கு மாணவர்களை தேடி வருவதாக அவ்வுயர் அதிகாரி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X