Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ )
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிடும் வகையில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மலையகத் தமிழ் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
குறிப்பிட்ட சில தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் மேற்கொள்ளப்படுகின்ற கூட்டொப்பந்தத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைப்பதில்லையென இன்று அனைவராலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிலர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் நேரடியாக தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதேபோல் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமானதொரு அடிப்படைச் சம்பளத்தினை ஜனாதிபதியின் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மலையகத் தலைமைகள் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .