2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வெல்லவாயவில் மிகப் பெரிய சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.எப்.எம்.தாஹிர்)

வெல்லவாய பிரதேசத்தில் 100 ஏக்கர் காணியில் இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை அமைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

தற்போது நகர மத்தியில் அமைந்துள்ள பதுளை சிறைச்சாலை மற்றும் சில பிரதான நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளும் வெல்லவாயவில் அமைக்கப்படவுள்ள சிறைச்சாலைக்கு இடம்மாற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இங்கு கைதிகளுக்கு விவசாய, கால்நடை, கணனி, ஆங்கில பயிற்சிகளும்  வழங்கப்பட விருப்பதுடன் சிறைச்சாலைகள் என்ற பெயரை புனர்வாழ்வு நிலையங்களாக பெயர் மாற்ற தீர்மானித்து வருவதாகவும் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தம் 11,000 கைதிகளுக்கு வசதிகள் உள்ள போதும் 22,000 கைதிகள் இருக்கின்றனர். இந்நிலைமை நாட்டில் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஆகையினால் சிறை கைதிகள் புனர்வாழ்வு அளிக்கப்படும் போது நாட்டின் அபிவிருத்திற்கு பிரயோசனம் உள்ளவர்களாக மாற்றி அமைப்பதே தற்போதைய தேவை என விஜித் விஜயமுனி சொய்சா கூறினார்.

        
   

 

 


  Comments - 0

  • Thilak Thursday, 14 October 2010 02:12 AM

    ஒரு நூலகம் அமைக்கப்பட்டால் ஒரு சிறைச்சாலைக்கான வாய்ப்பு குறையும் என்பார்கள். இலங்கையின் மிகப்பெரிய நூலகம் அடுத்து எங்கே அமையவுள்ளது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X