Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மாத்தளை உக்குவளை பிரதேசத்திலிருந்து கண்டி பொல்கொல்லை பிரதேசம்வரை அதி சக்திவாய்ந்த மின் விநியோகத்திட்டமொன்றுக்கு பயன்படுத்திவந்த இயந்திரம் ஒன்றினை திருடி மறைத்து வைத்திருந்த ஊழியர் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்று இம்மின் விநியோகத்திட்டத்தினை செயற்படுத்தி வருவதுடன் பிரதேசத்தை சேர்ந்த பலரும் இங்கு பணி புரிகின்றனர். இவ்வாறு பணி புரிந்துவிட்டு சில தினங்களுக்கு முன் விலகிச் சென்றுள்ள ஊழியர் ஒருவரே இதனை திருடியுள்ளார்.
சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க இவ்வியந்திரத்தால் நீர் பாய்ச்சவும் நிலத்தை செப்பனிடவும் முடியுமென அதன் சொந்தக்காரர் பொலிஸுக்கு தெரிவித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை கண்டி மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க முன் ஆஜர் செய்யப்பட்ட பின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தண்டனை வழங்கும் தினத்தை ஒத்திவைத்துள்ளார்.
அலவத்துகொடை பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி உட்பட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .