2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தம்புள்ளை விசேட வர்த்தக நிலையத்தின் பொலிஸ் நிலையம்

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை விசேட வர்த்தக நிலையத்தின் பாதுகாப்புக்காக விசேட பொலிஸ் நிலையம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை வர்த்தக நிலையத்தில் ஏற்படுவதாக கூறப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்துவதற்கும் வர்த்தக நிலையத்திற்கு வரும் விவசாயிகளினதும் வர்த்தகர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் இப்பொலிஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவின் ஆலோசனையின் பேரில் மாத்தளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலக் அபேசிறி 20 பேர்களை கொண்ட இவ்விசேட பொலிஸ் நிலையத்தை ஆரம்பித்துள்ளார்.

 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .