Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 09 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் தமது வாழ்வில் வெகு தூரம் சென்று விடுவார்கள் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாலை கண்டி வத்துகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட ஏ.இரத்னாயக்கா மத்திய கல்லூரியில் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான ஊடகம் தொடர்பான செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முன்னைய காலங்களில் கூட உலக மாற்றங்களை ஏற்படுத்;துவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகித்துள்ளன. இன்று அது பலம் வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது. உலக வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது உலகில் ஏற்பட்ட அனைத்து சமூகப் புரட்சிகளிலும் ஊடகங்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளன. இன்று உலகின் மூன்றாவது மாபெரும் சக்தியாக ஊடகங்கள் உருவெடுத்துள்ளதாக முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
நாளைய உலகில் கொடுக்கல், வாங்கல் செய்யக் கூடியவர்கள் இன்றைய மாணவர்கள். எனவே, இன்றைய மாணவர்கள் ஊடகங்கள் பற்றி தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.
ஒருவருக்கு சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலமே அவரை திறமையானவராக உருவாக்க முடியும். மாணவர் விடயமும் அப்படியே. எனவே சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பது ஆசிரியர்களினதும் நிர்வாகிகளினதும் கடமையாகும்.
எனவே ஆசிரியர்களும் அரசியல்வாதிகளும் இணைந்து மாணவ சமுதாயத்திற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றார்.
3 hours ago
7 hours ago
13 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
13 Aug 2025