Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 12 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.கோகிலவாணி)
தலவாக்கலை லிந்துலை பகுதியிலுள்ள மெரயா – எல்ஜின், போபத்தலாவ – நுவரெலியா செல்லும் டெஸ்போர்ட் பாதை என்பவற்றை உடனடியாக புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்படவுள்ளதாக நுவரெலிய பிரதேச சபையின் உபதலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளருமான ஏ.பி. சக்திவேல் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அண்மையில் நுவரெலியா பரிசுத்த திருத்துவக் கல்லூரியில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற, மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் சீர்குலைந்துள்ள இப்பாதைகள் குறித்தும் அவற்றை புனரமைப்பதற்கான நிதிப் பற்றாக்குறை குறித்தும் தான் தெரிவித்தபோது, மேற்படி பாதைகளை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்கித் தருவதாக கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இப்பாதைகளை உடனடியாக புனரமைப்பு செய்யுமாறு அதிகாரிகளை பணித்ததாக நுவரெலிய பிரதேச சபையின் உபதலைவர் ஏ.பி. சக்திவேல் கூறினார்.
மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கால்நடை அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இப்பாதைகளின் புனரமைப்பு வேலைகளை எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சக்திவேல் தெரிவித்தார்.
அதேவேளை, லிந்துல- டயகம, டிக்கோயா – போடஸ், மஸ்கெலியா- கார்மோட் போன்ற பாதைகளும் புனரமைப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிலகாலமாக இயங்காமலுள்ள டயகம – மெரயா வீதியினூடாக நுவரெலியா செல்லும் இ.போ.ச பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
3 hours ago
7 hours ago