Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 நவம்பர் 14 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆஸிக்)
'கசினோ விளையாட விரும்புபவர்கள் அதனை விளையாடினால் அதில் என்ன தவறு இருக்கின்றது' என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்கா கேள்வி எழுப்பினார்.
கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் இடம் பெறுகின்ற மலையக தேசிய உணவு கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் விஷேட அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாரு கேள்வி எழுப்பினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'அரசாங்கம் கசினோ சூதாட்டத்தை ஒரு பிரயோசனமான முறையில் முன்னெடுக்க முயலும் போது அனைவரும் விமர்சிக்கின்றனர். தற்போது கசினோ சூதாட்டத்தை பற்றி பலரும் பலவாறு பேசுகின்றனர். இருப்பினும் முன்னர் சிங்கப்பூர் பிரஜைகள் இலங்கையில் கசினோ களியாட்டங்களை நடத்திய போது எவரும் எதுவும் கூறவில்லை.
அதேபோல் தற்போதும் எமது பெரிய புள்ளிகள் இரகசியமாக கசினோ சூதாட்டங்களில் ஈடுபடும் போதும் யாரும் எதுவும் பேசுவதில்லை. ஆனால் அரசு அதற்கென ஒரு வலயத்தை உருவாக்கி இலாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டால் அதை விமர்சிக்கின்றனர்.
விரும்பியவர்கள் கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டால் நாம் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரம் அரசுக்கு வருமானமும் ஏற்படுகிறது.
எனவே இவைகள் தொடர்பாக எமது மனப்பாங்கில் துரித மாற்றம் ஏற்படவேண்டிய காலம் வந்துள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
13 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
7 hours ago