2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார் திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத மலைக்குச் செல்கின்ற பக்தர்களினதும் சுற்றுலாப் பயணிகளினதும் வசதி கருதி கேபிள் கார்களை உபயோகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறைவேற்று அதிகாரி திலக் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற குருவிட்ட பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இதற்கான உத்தேசத்திட்டம் முன்வைக்கப்பட்டதாக பொதுநிர்வாக அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன கூறியுள்ளார்.

நல்லதண்ணியிலிருந்து மீனவவாடிவரை ஒரு கேபிள் கார்த்தடமும்  அரிதான தாவரங்களைக் கொண்ட உயிரின பன்மைப் பகுதியூடாக ஏராதனவிலிருந்து ஸ்ரீபாதஸ்தானவரை மற்றைய கேபிள் கார்த்தடமுமாக இரு கேபிள் கார்த்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இதேபோன்று நக்கில்ஸ் மலைத்தொடரிலும் வெதிஹிரிகந்த புனித பகுதியிலும் கேபிள் கார் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

கேபிள் கார் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அவுஸ்திரேலியா மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு பல அமைச்சர்கள் விஜயம் செய்துள்ளதாக தெரிவித்த திலக் காரியவசம், இருப்பினும் இந்த திட்டத்தில் சமய, கலாசார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தாக்கம் மீதான பாரதூரமான விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது எனவும் கூறினார். (அஜித்லால் ஷாந்தஉதய)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X