2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

போலி நாணயங்களுடன் நால்வர் கைது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


புதையல் மூலம் பெற்றதாகக் கூறி ஆயிரக்கணக்கான பொற் காசு மற்றும் தங்க நாணய குற்றிகளை விற்பனைக்காக கொண்டு வந்தபோது கண்டி பொலிஸார் அவற்றை இன்று சனிக்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

கண்டி நகருக்கு இன்று மோட்டார் வாகனம் ஒன்றை பயன்படுத்தி கொண்டுவரப்பட்ட மேற் குறிப்பிட்ட போலி உலோக குற்றிகளை கண்டி நகரில் வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்தபோது, மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி இப்போலி உலோக குற்றிகளுடன் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து எட்டு கையடக்க தொலைபேசிகளும் நவீன ரக மோட்டார் வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களுல் ஒருவர் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த பிரதேச அரசியல்வாதி ஒருவரது சகோதரர் என பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்களை கண்டி பிரதான நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கையை பொலிஸார் எடுத்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X