2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட பெண்ணைத் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது

Kanagaraj   / 2013 ஜனவரி 07 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுவர்ணஸ்ரீ

பூண்டுலோயா சீன் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் சிற்றாறொன்றைக் கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணொருவர் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று இன்று பிற்பகல் 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை தேடும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பூண்டுலோயா பிரதேசத்தில் இன்று  பிற்பகல் வேளையில் கடும் மழை பெய்து கொண்டிருந்த போது குறிப்பிட்ட பெண் தனது கணவருடனும் பிள்ளையுடனும் வீட்டுக்கு அருகிலுள்ள சிற்றாறைக் கடக்க முற்பட்ட போது அந்தப்பெண்ணும் பிள்ளையும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர்.
அதன் போது குறிப்பிட்ட பெண்ணின் கணவர் பிள்ளையை உடனடியாக தூக்கிய போதும் தனது மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து தோட்ட மக்கள் குறிப்பிட்ட பெண்ணை ஆற்றுப்பகுதிகளில் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பபடுகின்றது. இந்தச்சம்பவம் தொடர்பாக பூண்டுலோயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X