2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மூடப்பட்டுள்ள அலவத்துகொடை கலைமகள் தமிழ் வித்தியாலயத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


மண்சரிவு அபாயத்தைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ள அலவத்துகொடை கலைமகள் தமிழ் வித்தியாலயத்தை உடனடியாகத் திறக்குமாறும்  அதனை பாதுகாக்குமாறும் கோரி நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திலுள்ள ஒரேயொரு தமிழ் பாடசாலையாக இதுவுள்ளது. இப்பாடசாலையில் மண்சரிவு அபாயத்தை காரணம் காட்டி அதனை மூடுவதற்கு அதிகாரிகள் எடுத்துள்ள முடிவினால் இப்பாடசாலையில் கல்வி கற்கும் 460 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இப்பாடசாலை பாரியதாக மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கவில்லை. இங்கு காணப்படும் சிறுசிறு குறைபாடுகளை நீக்கி உடனடியாக பாடசாலையை ஆரம்பிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X