2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெலிமடை, மிராஹாவத்த மல்பொத்த வித்தியாலத்தில் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 09 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரட்ணம் கோகுலன்


வெலிமடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிராஹாவத்த மல்பொத்த வித்தியாலயத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கொண்டு வருவதற்காக அவ்விடத்திற்கு சென்ற வெலிமடை கல்வி வலய பணிப்பாளரும் வலய மட்ட வணிகத் துறை ஆலோசகரும்; ஆர்ப்பாட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து அவர்களை மீட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பாடசாலையின அருகில்; மற்றுமொரு பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் அனைவரும் பாடசாலையை விட்டு விலகி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக எதிர்காலத்தில் மல்பொத்த பாடசாலையின் ஆரம்ப பிரிவின் நிலை கோள்விக்குறியாகிவிடும் என்று கருதிய பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இது தொடர்பில் சிறந்த தீர்வினை கோரி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுட்பட்டுள்ளனர்.

தீர்வினைப் பெற்றுகொடுப்பதற்காக வலய கல்விப் பணிப்பாளரும் மற்றும் வலையமட்ட வணிகத் துறை ஆலோகசரும் அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே ஆர்ப்பாட்டக்காரர்களால் பாடசாலையின் கணினி அறையில் மேற்படி இருவரும் சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இப்பாடசாலையில் நிலவும் பிரச்சினைக்கு ஒருவாரத்தில் தீர்வை பெற்றுத்தருவதாக இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X