2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

லொறி மோதியதால் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

Super User   / 2013 ஜனவரி 14 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை – பேராதனை வீதியில் குருதெனிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வாகன நெரிசலை கட்டுப்படுத்த சென்ற பேராதனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் லொறியொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

பேராதனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரான எம்.கருணாரட்ன என்பவரே உயிரிழந்தவராவார்.

குருதெனி பகுதியில் ஏறபட்ட வாகன நெரிசலை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த போது வேகமாக வந்த லொறியொன்று பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவர் பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகள் பேராதனை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X