2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நியகம்பாய விகாரையின் நூதனசாலையில் திருட்டு

Super User   / 2013 ஜனவரி 14 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.எம். ரம்ஸீன்


கம்பளை, நியகம்பாய விகாரையின் நூதனசாலை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த புராதனப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த நூதனசாலையின் கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த கொள்ளையர்கள் புராதன துப்பாக்கி, வாள் உட்பட  கம்பளை அரச கால பொருட்கள் பலவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இக்கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக கம்பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி எம். காங்கர தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X