2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் இளைஞர் குழு பதுளைக்கு விஜயம்

Super User   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எப்.எம். தாஹிர்


பதுளைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் இளைஞர் குழுவினருக்கும் பதுளை சிறைச்சாலை புனர்ஜீவன குழுவிற்கும் இடையிலான நல்லிணக்க கிரிக்கட் சுற்றுப்போட்டி பதுளை வில்ஸ்பார்க்க மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பதுளை வில்ஸ் பார்க்க மைதானத்திற்கு வருகை தந்த பகிஸ்தான் யூத் கழகத்தினரை பதுளை இளைஞர் சேவை மன்றம் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை பிரதான ஜெயிலர் ரோஹன கலப்பத்தி உள்ளிட்ட நலன்புரி சங்கத்தினர் வரவேற்றனர்.

இதனையடுத்து பதகிஸ்தான் யூத் கழகத்தினருக்கும் சிறைச்சாலை புனர்ஜீவன கழகத்திற்கும் இடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி மிக விறுவிறுப்பான இடம்பெற்றது. இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய பதுளை சிறைச்சாலை புனர்ஜீவன கழகத்தினர் 79 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் யூத் கழகத்தினர் 44 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் இழந்து புனர்ஜீவன கழகத்திடம் தோல்வியுற்றனர். சம்பியன் கிண்ணத்தை பதுளை சிறைச்சாலை யூத் கழகம் சுவீகரித்து கொண்டது.
சிறந்த விளையாட்டு வீரராக பதுளை புனர்ஜீவன கழக பண்டார தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சாளராக அஜித் பிரியங்கர தெரிவுசெய்யப்பட்டார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .