2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆலயத்திற்கு சேதம் விளைவித்தவர்களை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


குடிபோதையில் ஆலயத்திற்கு புகுந்து ஆலயத்திற்கு சேதம்விளைவித்த இருவரையும் வெளியேற்றமாரு கோரி தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு, இருவர் குடிபோதையில் ஆலயத்துக்குள் நுழைந்து அங்குள்ள உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

இச்செயற்பாட்டை கண்டித்து தோட்ட பொதுமக்கள் மேற்படி இருவரையும் தோட்டத்திலிருந்து  வெளியேற்றுமாறு கோரி எதிர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்ததனர்.

இம்மக்கள் இன்று முதல்  வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட போவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விஜயம்மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸ் உதவி அதிகாரி உடகம அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .