2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கணினிகள் கையளிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எப்.எம். தாஹிர் 

பதுளை அல் அதான் மகா வித்தியாலயத்திற்கு 10 கணினிகள் அகில இலங்கை சொனகர் சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இப்பாடசாலையின் கணினி ஆய்வுக் கூடத்திற்கு கணினிகள் வழங்கப்படாமை பாரிய பிரச்சினையாக காணப்பட்டது.

இந்நிலையில், அகில இலங்கை சொனகர் சங்கமானது இப்பாடசாலைக்கு   10 நவீன கணனிகளை அன்பளிப்பு செய்துள்ளது.

கணினிகளை கையளிக்கும்  நிகழ்வு வித்தியாலய அதிபர் ஜனாபா இனாயா தலைமையில் திங்கட்கிழமை மாலை பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை சொனகர் சங்கத்தின் தலைவர் வைத்திய பஸ்லி நிஸார் மற்றும் அதன் செயலாளர் ரிஸ்கி சலீம் ஆகியோர் கலந்துகொண்டு கணனி ஆய்வு கூடத்திற்கு அன்பளிப்பு செய்தனர்.

இதன்போது பதுளை அல் அதான் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பதுளை மாவட்ட சொனகர் சங்கத்தின் உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .