2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ் வண்டியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் மரணம்

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன்

கம்பளை – பேராதனை வீதியில் பயணித்துகொண்டிருந்த தனியார் பஸ் வண்டியில் இருந்து விழுந்த குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை – பேராதனை வீதி, அங்குனாவல பகுதியில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கம்பளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் வண்டியில் கதவு அருகில் பயணம் செய்து கொண்டிருந்த மேற்படி நபர் பஸ்ஸிலிருந்து வீழ்ந்து  உயழிரிழந்துள்ளார். 

மூன்று பிள்ளைகளின் தந்தையரான இவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் முறுத்தகஹமுள பகுதியை சேர்ந்த முஹம்மத் பாரூக் என்ற (67 வயது) குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .