2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குளோரின் வாயு கசிவு விவகாரம்; திங்கள் விசாரணை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 21 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் அமைந்துள்ள அவிசாவளை நகருக்கு நீர் விநியோகம் செய்யும் நீர்த்தாங்கியில் இடம்பெறும் குளோரின் வாயு கசிவு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணை நடத்தவுள்ளது.
 
இந்த குளோரின் வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சார்பாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடந்த 5ஆம் திகதி கையளித்த முறைப்பட்டை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.45 மணிக்கு நீதிபதி பிரியந்த பெரேரா முன்னிலையில் இந்த விசாரணையினை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த விசாரணைக்கு மனுதாரர் என்ற முறையில், ஜனநாயக மக்கள் முன்னணி  தலைவர்  மனோ கணேசனுக்கும், பிரதிவாதிகள் என்ற முறையில் மத்திய சுற்று சூழல் அதிகாரசபை தலைவருக்கும், தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவருக்கும், அவிசாவளை நகரசபை தலைவருக்கும், சம்பந்தப்பட்ட ஹங்வெல்ல பிரதேச செயலாளருக்கும் தகுந்த ஆவணங்களுடன் சமூகமளிக்கும்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .