2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


மலையக இளைஞர்களுக்கு சிங்கப்பூர் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று நுவரெலியா மாநகர சபை  மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சிங்கப்பூர் நாட்டில் இருந்து வருகை தந்த குழுவினரால் என்ன வேலை அங்கு உள்ளது, எப்படி வேலைகளை பெற்றுக்கொள்வது, தேவையான தகுதிகள் என்ன, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் என்ன, வேலைக்கான கொடுப்பனவு எப்படி, உரிய பயிற்சிகளை எங்கே பெற்றுக்கொள்ளலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0778818787 என்ற  தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஆர்.ரவீந்திரனை தொடர்புகொள்ள முடியும்.

  Comments - 0

  • parthiban Thursday, 26 June 2014 05:40 PM

    இலங்கை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .