2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இராஜாங்கனை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வி

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அநுராதபுரம், இராஜாங்கனை பிரதேசசபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது.

பிரதேசசபைத் தலைவர் பிரபாத் வருஷவித்தானவினால் நேற்று வியாழக்கிழமை முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக இரு வாக்குகள் மட்டுமே கிடைத்ததுடன் எதிராக ஆறு வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை  சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கடந்த ஏழுhம் திகதியும் முதல் முறையாக வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டபோது அதற்கு ஆதரவாக அதன தலைவர் மட்டுமே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .